சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற பக்தர்களின் கருத்துக்கு ஆதரவு - ரமேஷ் சென்னித்தலா

சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற பக்தர்களின் கருத்துக்களை ஆதரிப்பதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற பக்தர்களின் கருத்துக்கு ஆதரவு - ரமேஷ் சென்னித்தலா
x
சபரிமலைக்கு பெண்கள் போகக்கூடாது என்ற பக்தர்களின் கருத்துக்களை ஆதரிப்பதாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார். சபரிமலையில் பெண்கள் வருவதற்கு தடை செய்யப்படவில்லை, குறிப்பிட்ட வயதுடையவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர் குறிப்பிட்டார். இந்த நடைமுறை சுமார் 5000 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார். கட்சியில் உள்ள அனைத்து முன்னாள்  தேவசம் போர்டு உறுப்பினர்களையும் அழைத்து ஆலோசனை செய்ய உள்ளதாக ரமேஷ் சென்னித்தலா தெரிவித்துள்ளார். முன்னதாக பந்தளம் ராஜ குடும்பத்தின் உறுப்பினர்களை சந்தித்த, ரமேஷ் சென்னித்தலா 
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்தார்.

Next Story

மேலும் செய்திகள்