சபரிமலை தீர்ப்பு : மு.க. ஸ்டாலின் வரவேற்பு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சபரிமலை தீர்ப்பு  : மு.க. ஸ்டாலின் வரவேற்பு
x
சபரிமலை கோவிலுக்குள் பெண்கள் நுழைய அனுமதி அளித்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள மு.க. ஸ்டாலின், ஆணும் பெண்ணும் சரி நிகர் சமம் என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் எந்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என குறிப்பிட்டுள்ளார். சமூக நீதி - பாலின சமத்துவம் - பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இந்த தீர்ப்பு ஒரு மைல் கல் என்று மு.க.ஸ்டாலின் வர்ணித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்