குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்

உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது
குற்றப்பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடைக்கோரிய வழக்கு : இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
x
அரசியலில் குற்றப்​பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனை தடுப்பதற்கு தேர்தலில் போட்டியிட அவர்களுக்கு தடை விதிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக் கூடாது என சட்டம் இருந்தாலும், கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் எண்ணிக்கை அரசியலில் அதிகரித்து வருவதால், இந்த சட்டத்தை மேலும் வலிமையாக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. குறிப்பாக கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட உடனோ அல்லது குற்றச்சாட்டுகள் பதியப்பட்ட உடனோ, அந்த நபர்களை தேர்தலில் போட்டியிட தடை விதித்தால், குற்றப்பின்னணி கொண்டவர்கள் அரசியலில் நுழைவதை தடுக்கலாம் என்ற வாதமும் முன் வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு  இன்று  தீர்ப்பு வழங்க உள்ளது. மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படும் பட்சத்தில் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

Next Story

மேலும் செய்திகள்