நாளை பேரறிஞர் அண்ணாவின் 110-பிறந்த நாள் விழா

பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளனர்.
நாளை பேரறிஞர் அண்ணாவின் 110-பிறந்த நாள் விழா
x
* பேரறிஞர் அண்ணாவின் 110-வது பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு, அ.தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி  கடிதம் எழுதியுள்ளனர். 

* அதில் இந்திய மொழிகள், ஒவ்வொன்றும் அவற்றால் பேசப்படும் மக்களால் பெரிதும் நேசிக்கப்படவும், தொன்மை சிறப்பு வாய்ந்த இந்திய பண்பாடு புதிய கோணத்தில் புரிந்து கொள்ளப்படும் காரணமாக அமைந்தது அண்ணாவின் பொது வாழ்க்கை என்பதை அதில் சுட்டிக்காட்டி உள்ளனர். 

* மாநில மொழிகள் மதிக்கப்பட வேண்டும் என்பதையும், ஒரு மொழியை மற்றவர்கள் மீது திணிக்கும் போது , நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் என்பதை  எடுத்துரைத்தவர் பேரறிஞர் அண்ணா என்று   தெரிவித்துள்ளனர். மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் ஆட்சிக்கு வர முடியும் என்பதை  நிரூபித்துக் காட்டியவர் பேரறிஞர் அண்ணா என்றும் அதில் இருவரும் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்