"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை - பிரதமர் மோடி
x
காசியாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதி பாஜக தொண்டர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். அப்போது, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற அனைத்து ஊழல்களும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி அனைத்து மட்டத்திலும் தோல்வியை சந்தித்து வருவதாக தெரிவித்த மோடி, எதிர்க்கட்சி பணியை கூட திறம்பட செய்ய இயலவில்லை என்றும் குற்றம்சாட்டினார். காங்கிரசில் குடும்ப ஆதிக்கம் உள்ளதாக சுட்டிக்காட்டிய மோடி, பாஜகவில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்றும் கூறினார். பாஜக ஆட்சியில் நிறைவேற்றபட்டுள்ள மக்கள் நலத்திட்டங்களையும் ​மோடி பட்டியலிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்