அரசியலில் ரஜினி, கமலுக்கு அடுத்து விஷால் - அரசியலில் நுழைவதற்கான அச்சாரமா? மக்கள் நல இயக்கம்

நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றியுள்ளார்.
அரசியலில் ரஜினி, கமலுக்கு அடுத்து விஷால் - அரசியலில் நுழைவதற்கான அச்சாரமா? மக்கள் நல இயக்கம்
x
* நடிகரும், நடிகர் சங்க பொதுச்செயலாளருமான விஷால், தனது ரசிகர் நற்பணி இயக்கத்தை, மக்கள் நல இயக்கமாக மாற்றியுள்ளார். அதற்கான கொடியையும் அவர் அறிமுகப்படுத்தி இருப்பது, அரசியலில் நுழைவதற்கான அச்சாரமா?

* நடிகர்கள் ரஜினி, கமல்  ஆகியோரது அரசியல் பிரவேசம் தமிழக அரசியலை மீண்டும் சினிமாவின் பக்கம் இழுப்பதாக ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது  வரிசையில், நடிகர் விஜய்யும், தனது படங்களில் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதுடன்,  ரசிகர் மன்றங்களையும் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார்.

* ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிரடியாய் வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகர் விஷால்.  ஏற்கனவே நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்க தேர்தல்களில் விஷால் வெற்றி வாகை சூடினார். தற்போது "இரும்புத்திரை" படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் மீண்டும் அரசியல் திரியைக் பற்ற வைத்திருக்கிறார்.

* மேலும், தனது நற்பணி மன்றங்களை எல்லாம் மக்கள் நல இயக்கங்களாக மாற்றி அறிவித்து அனைவரது புருவங்களையும் உயரச் செய்துள்ளார். அது மட்டுமின்றி இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தியது, கட்சி தொடங்குவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்படுகிறது.

* தமிழக அரசியலில் ஏற்கனவே உள்ள ஜாம்பவான்கள் மத்தியில் பொறுத்திருந்து பார்க்கலாம் அரசியலில் விஷாலின் காய் நகர்த்தல்கள் எப்படி இருக்கப் போகிறது என்று!

Next Story

மேலும் செய்திகள்