தி.மு.க.பொருளாளர் துரைமுருகன் கடந்து வந்த பாதை...

தி.மு.க. பொருளாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ள துரைமுருகன் கடந்து வந்த பாதையை தற்போது பார்ப்போம்...
தி.மு.க.பொருளாளர் துரைமுருகன் கடந்து வந்த பாதை...
x
* வேலூர் மாவட்டம் காங்குப்பத்தில் 1938 ஆம் ஆண்டு ஜூலை முதல் தேதி துரைசாமியின் மகனாக பிறந்தார் துரைமுருகன். 

* பள்ளி படிப்பை சொந்த ஊரில் முடித்த துரைமுருகன், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.பட்டமும், அதனைத் தொடர்ந்து சென்னை சட்டக் கல்லூரியில் சட்டமும் பயின்றார். இதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் தொழில் செய்து வந்தார்.  

* தி.மு.க.வில் இணைந்த துரைமுருகன் கடந்த 1971 ஆம் ஆண்டு, முதல் முறையாக காட்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு,  தனது 33 ஆம் வயதில் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்வானார். 

* இதனைத் தொடர்ந்து 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

* இதேபோன்று  1989, 1996, 2001, 2006, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காட்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

* சிறந்த மேடை பேச்சாளரான, துரைமுருகன், பொதுப்பணித்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக  கருணாநிதி அமைச்சரவையில் பதவி வகித்துள்ளார். 

* ஆட்சியில் மட்டுமல்லாமல் கட்சியிலும் துணைப் பொதுச் செயலாளர், தலைமை நிலைய முதன்மை செயலாளர் என உயர்ந்தவர் துரைமுருகன். 

* தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமி ஆகியோருக்கு அடுத்தபடியாக கருணாநிதியின் நம்பிக்கையை பெற்று திகழ்ந்தவர். 

* துரைமுருகனை, ஒருகட்டத்தில் அ.தி.மு.க.வுக்கு வருமாறு எம்.ஜி.ஆர். அழைத்த போது, அதை அவர் மறுத்ததை எம்.ஜி.ஆர். பேரவையில் சுட்டிக்காட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.

* 50 ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்த வகையில் தற்போது தி.மு.க.வில் மூன்றாவது இடமாக விளங்கும் பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என்பது, குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்