ஸ்டாலின் சவால் ஹெச்.ராஜா பதிலடி

திமுக தலைவர் ஸ்டாலின், இந்தியாவை காவிமயம் ஆக்க துடிக்கும் பாஜக அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார்.
ஸ்டாலின் சவால் ஹெச்.ராஜா பதிலடி
x
கூட்டத்தில் பேசியதை, தனது சமூக வலைதள பக்கத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா முழுவதும் காவி நிறம் பூச நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தனது சமூக வலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் எனவும் ஸ்டாலினின் சவாலை ஏற்க மோடியின் காவி தொண்டர்கள் தயாராகவே உள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், களம் காண்போம் எனவும் ஹெச்.ராஜா குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்