எம்ஜிஆர் நுாற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

சென்னை பையனூரில் எம்ஜிஆர் நூற்றாண்டு படபிடிப்பு தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
எம்ஜிஆர் நுாற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்
x
சென்னை பையனூரில் தமிழக அரசு சார்பில் திரைக்கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்ட 65 ஏக்கர் நிலத்தில் 15 ஏக்கர் பரப்பளவுக்கு எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த படபிடிப்பு தளம் அமைக்கப்பட்டுள்ளது.  இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, படப்பிடிப்பு தளத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். 

துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு

விழாவில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன், நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி, ஆர்கே.செல்வமணி, பொன்வண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 56 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள  இந்த படப்பிடிப்பு தளம், இந்தியாவிலேயே உயரமான படப்பிடிப்பு தளம் ஆகும். 



Next Story

மேலும் செய்திகள்