"நேர்மையான ஐஜியை நியமித்து முதல்வர் விவகாரத்தில் விசாரணை தேவை" - ஸ்டாலின்

முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு துறையில் தேங்கி கிடப்பது அதிர்ச்சி அளிப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேர்மையான ஐஜியை நியமித்து முதல்வர் விவகாரத்தில் விசாரணை தேவை - ஸ்டாலின்
x
ஆளும் அதிமுக வினரின் ஊழல் பட்டியலை ஆதாரங்களோடு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், குற்றச்சாட்டில் சிக்கி இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குநர் விசாரித்தால், எப்படி நியாயம் கிடைக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், புகாருக்கு உள்ளான லஞ்ச ஒழிப்பு துறை இணை இயக்குநரை உடனடியாக இட மாற்றம் செய்து விட்டு, நேர்மையான ஐஜி ஒருவரை இணை இயக்குநராக நியமித்து, ஊழல் புகார்களை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அமைச்சர்கள், துணை முதலமைச்சர், முதலமைச்சர் ஆகியோர் மீது கொடுக்கப்படும் ஊழல் புகார்கள் அனைத்தும் தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு துறையில், ஆமை வேகத்தில் கூட நகர முடியாமல் தேங்கி கிடப்பது அதிர்ச்சி அளிப்பதாக அறிக்கையில், மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்