சென்னை தினத்தை கொண்டாட ஸ்டாலின் அழைப்பு...

சென்னை தினத்தை கொண்டாட வேண்டும் என்று திமுகவினரை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தினத்தை கொண்டாட ஸ்டாலின் அழைப்பு...
x
சென்னை தினத்தை கொண்டாட வேண்டும் என்று திமுகவினரை அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கையில், 1920 ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சியிலேயே சென்னையின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் தீட்டப்பட்டு, கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார். நீதிக்கட்சி ஆட்சியில் தான் தியாகராயர் நகர் உருவானது என்றும், ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளியில் தான் இலவச மதிய உணவுத் திட்டம் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டதையும் ஸ்டாலின் நினைவு கூர்ந்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னையின் முதல் மேயர் என்ற பெயரினைப் பெறும் நல்வாய்ப்பு தமக்கு கிடைத்ததை நினைவு கூர்ந்த ஸ்டாலின், "மெட்ராஸ் டே " என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான் என்றும், அதனைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்