கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் நேரில் அஞ்சலி...

அமெரிக்காவில் இருந்து, அதிகாலையில் சென்னை திரும்பிய தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று, அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் விஜயகாந்த் நேரில் அஞ்சலி...
x
மருத்துவ சிகிச்சைக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அமெரிக்கா சென்றிருந்ததால், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவின்போது, நேரில் அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. இதனால், கருணாநிதியின் மறைவுக்கு அமெரிக்காவில் இருந்து கண்ணீர் மல்க விஜயகாந்த் இரங்கல் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் கருணாநிதியின் மறைவை தன்னால் தாங்க முடியவில்லை என்று கூறி, கண்ணீர் விட்டு அழுதார். இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம், இன்று அதிகாலை விஜயகாந்த் சென்னை திரும்பினார். விமான நிலையத்திலிருந்து நேராக, மெரீனா கடற்கரைக்கு சென்ற அவர், அங்குள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.Next Story

மேலும் செய்திகள்