கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை
பதிவு : ஆகஸ்ட் 07, 2018, 07:52 AM
மாற்றம் : ஆகஸ்ட் 07, 2018, 08:14 PM
திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை நிகழ்ந்தவற்றை பார்ப்போம்.
* வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில்  இருந்த படியே சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 

* கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் ஆம்புலன்ஸ்  மூலம்
அழைத்துச் செல்லப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

* 28 ஆம் தேதி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் 
அனுமதிக்கப்பட்டதாகவும், கருணாநிதி உடல்நிலை சீராகி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

* குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்,
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,  ஆகியோர் கருணாநிதி சிகிச்சை பெறும் அறைக்கே சென்று பார்த்தனர்.

* கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படமும்,
ஸ்டாலின் அவரிடம் பேசும் புகைப்படமும் வெளியானது.

* முன்னாள் பிரதமர் தேவகவுடா, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஸ்டாலினிடம் கருணாநிதி உடல் நிலை
குறித்து கேட்டறிந்தனர்.

* 29 ஆம் தேதி இரவு மருத்துவமனை வெளியிடப்பட்ட அறிக்கையில்,  கருணாநிதியின் உடல் நிலையில் லேசான பின்னடைவு ஏற்பட்டதாகவும், பின்னர் நிலைமை சீரடைந்ததாகவும், தெரிவிக்கப்பட்டிருந்தது.

* அன்று இரவு மருத்துவமனை முன்பு  குவிந்த தொண்டர்களை போலீஸார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

* இதனைத்தொடர்ந்து 31 ஆம் தேதி மருத்துவமனை
வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும்,அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

* நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில்,கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும்,வயது மூப்பு காரணமாக முக்கிய உறுப்புகளை சீராக வைத்திருப்பது சவாலாக உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இதையடுத்து காவேரி மருத்துமனைக்கு வெளியே மாலை முதலே திரண்ட திமுக தொண்டர்களும்  நிர்வாகிகளும் எழுந்து வா எங்கள் தலைவா என்று  மனமுருக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

573 views

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1096 views

திமுக தலைவர் கருணாநிதிக்கு மவுன அஞ்சலி

மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதிக்கு பல இடங்களில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

502 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

633 views

பிற செய்திகள்

சமயபுரம் தைப்பூசத் திருவிழா நிறைவு

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்றது.

3 views

2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு : முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்பு

சென்னை நந்தம்பாக்கத்தில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது.

28 views

நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி குறித்து பேச அதிமுக குழு அமைப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, தேர்தல் அறிக்கை தயாரிக்க, அ.தி.மு.க சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

53 views

பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க யாரும் தயாராக இல்லை - திருநாவுக்கரசர்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

24 views

கணவர் இறந்த அதிர்ச்சியில் ஊமையான பெண் : பாம்பை பார்த்ததும் பேச்சு வந்த அதிசயம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், பாம்பை பார்த்த அதிர்ச்சியில் ஊமை பெண் பேசியதால் உறவினர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.

336 views

100 வயதை கடந்த சூரியனார் கோயில் ஆதீனம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலின் 27 வது ஆதீனம், நூறு வயதை கடந்ததையொட்டி அவரது ஜென்ம நட்சத்திர விழா நடைபெற்றது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.