18 எம்எல்ஏக்கள் வழக்கு: 5வது நாளாக வாதம்

18 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்தது சட்ட விரோதம் சபாநாயகர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்.
18 எம்எல்ஏக்கள் வழக்கு: 5வது நாளாக வாதம்
x
* 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் விசாரணை, உயர் நீதிமன்றத்தில் 3வது நீதிபதி சத்திய நாராயணன் முன்பு 5வது நாளாக இன்று நடைபெற்றது. சபாநாயகர் தரப்பில் வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதிட்டார். 

* அப்போது அவர், உட்கட்சி வழிமுறைகள் தோல்வி அடைந்ததால், ஆளுநரை சந்தித்ததாக, 18 எம்எல்ஏக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது எனவும்18 பேரின் கருத்துகளை கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காக, முதலமைச்சரை மாற்ற அவர்கள் ஆளுநரை சந்தித்து இருப்பதாகவும் வாதிட்டார். 

* முதலமைச்சரை மாற்ற ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்தக் கோரிக்கையுடன் ஆளுநரை சந்திப்பது சட்ட விரோதம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

* 18 எம்எல்ஏக்களும் சபாநாயகரிடம் விளக்கத்தை அளித்திருக்க வேண்டுமே தவிர,  முதல்வரையும், அரசு கொறடாவையும் குறுக்கு விசாரணை செய்து, புகார்களை நிரூபிக்க உரிமை கோர முடியாது என்றார்.

* மேலும், நீதிபதி சுந்தர் அளித்த தீர்ப்பில், 18 பேரும் ஆளுநரை சந்தித்தது தவறாக இருந்தாலும், அதற்காக தகுதி நீக்கம் செய்ய முடியாது என்று கூறியிருப்பதை, நிராகரிக்க வேண்டும் எனவும் அரியமா சுந்தரம் வாதிட்டார்.

* 18 எம்எல்ஏக்களின் நோக்கம் ஆட்சியை கலைக்கவேண்டும் என்பதே எனவும் ஆவணங்களை முறையாக ஆய்வு செய்து தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், 18 பேரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அரியமா சுந்தரம் தெரிவித்தார்.

* இதையடுத்து, சபாநாயகர் தரப்பு வாதம் முடிவடைந்து, முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதத்தை தொடங்கினார். வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்