சென்னையில், பிரியாணிக்காக ஓட்டல் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - ஐந்து பேர் கைது

சென்னையில், பிரியாணிக்காக ஓட்டல் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில், பிரியாணிக்காக ஓட்டல் ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் - ஐந்து பேர் கைது
x
கடந்த 29-ஆம் தேதியன்று, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடை ஒன்றிற்கு சென்ற திமுக மாணவரணி நிர்வாகி யுவராஜ் உள்ளிட்ட 10 பேர், பிரியாணி இல்லை எனக் கூறிய கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு அவர்களை கடுமையாக தாக்கினர். அவர்கள், பாக்சிங் முறையில் ஊழியர்களை தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

காயமடைந்த ஹோட்டல் ஊழியர்களை சந்தித்த ஸ்டாலின்
இந்த நிலையில், திமுக நிர்வாகியால் தாக்கப்பட்ட ஹோட்டல் ஊழியர்களை, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்தார். சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு  சென்ற ஸ்டாலின், அங்கு, யுவராஜ் குழுவினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 
Next Story

மேலும் செய்திகள்