திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர்கள் அஜித்,விஜய் நேரில் விசாரிப்பு

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர்கள் அஜித்,விஜய் நேரில் விசாரிப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நடிகர்கள் அஜித்,விஜய் நேரில் விசாரிப்பு
x
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடல் நலம் குறித்து நடிகர் விஜய் விசாரித்தார். நேற்று காலை, காவேரி மருத்துவமனைக்கு சென்ற நடிகர் விஜய், அங்கு, திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம், கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். சுமார் 10 நிமிடம் வரை மருத்துவமனையில் இருந்த நடிகர் விஜய், பின்னர், புறப்பட்டு சென்றார்.

நடிகர் அஜித், சென்னை - காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க நேற்று இரவு 8. 30 மணி அளவில் வந்தார். அவரை, எதிர்க்கட்சி தலைவர்  ஸ்டாலின் வரவேற்று, அழைத்து சென்றார். கருணாநிதியின் உடல் நலம் குறித்து, ஸ்டாலினிடம் அஜித் கேட்டறிந்தார். 

Next Story

மேலும் செய்திகள்