அரசு தற்காலிக நர்சுகளுக்கு சம்பளம் உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்

ரூ.7,700 - ல் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்வு 12 ஆயிரம் நர்சுகள் பயன் பெறுவார்கள் என தகவல்
அரசு தற்காலிக நர்சுகளுக்கு சம்பளம் உயர்வு - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
அரசு தற்காலிக நர்சுகளுக்கு மாதம் 7 ஆயிரத்து 700 ரூபாயில் இருந்து, 14 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டு உள்ளார். இந்த தகவலை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்த சம்பள உயர்வு, முன் தேதியிட்டு, ஏப்ரல் 1 ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், இவர்களுக்கு ஆண்டுதோறும் 500 ரூபாய் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தமிழக அரசின் இந்த அறிவிப்பி ன் மூலம் சுமார் 12 ஆயிரம் நர்சுகள் பயன்பெறு வார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்