உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவை உரிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்

தவறினால் மற்ற மாநில கட்சிகளின் ஆதரவை திரட்டி மாநிலங்களவையில் திமுக போராடும் - ஸ்டாலின்
உயர்கல்வி ஆணைய வரைவு மசோதாவை உரிய முறையில் மாற்றி அமைக்க வேண்டும் - திமுக செயல் தலைவர் ஸ்டாலின்
x
உயர்கல்வி ஆணைய வரைவு மசோதா தொடர்பாக பெயரளவில் நடத்திய கருத்துக் கேட்புக்கு,  நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளாக
ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயர் கல்வி ஆணையத்தில்  மாநிலப் பிரதிநிதி ஒருவர் கூட இருக்கமாட்டார் என்பது, மத்திய அரசின் "கைப்பாவை"யாகவே அது இயங்கும் என்பதை மசோதா தெளிவுபடுத்துவதாக அவர்  தெரிவித்துள்ளார். பா.ஜ.க.விற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்பு கூட, உயர்கல்வி ஆணையத்தைக் கொண்டு வர மாட்டோம் என்ற உத்தரவாதத்தை மத்திய அரசிடம் இருந்து அதிமுக கேட்டுப் பெறவில்லை என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயர்கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வருவதே மத்திய அரசின் நேர்மையான நோக்கம்" என்றால், "வரைவு மசோதா" உரிய முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசு இதை செய்ய தவறினால் மற்ற மாநிலக் கட்சிகளின் ஆதரவையும் திரட்டி மாநிலங்களவையில் திமுக போராட்டம் நடத்தும் என்று ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்