"ஆட்சியை கைப்பற்ற ராகுல் காந்தி அவசரப்படுகிறார்"-மோடி

ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவசரப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஆட்சியை கைப்பற்ற ராகுல் காந்தி அவசரப்படுகிறார்-மோடி
x
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான  விவாதத்துக்கு பதில் அளித்து  பேசிய பிரதமர் மோடி,
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தன்னை கட்டி தழுவ இருக்கையில் இருந்து எழுந்திருக்குமாறு சொன்னதாக தெரிவித்தார்.  பிரதமர் இருக்கையை கைப்பற்ற ராகுல் ​அவசரப்படுவதாகவும் கூறினார். 

யார் பிரதமராக வரவேணடும் என்பதை வாக்காளர்கள்தான் முடிவு செய்வார்கள் என்றும் மோடி குறிப்பிட்டார்.பாஜக தலைமையிலான அரசுக்கு 125 கோடி மக்களின் ஆதரவு உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சிக்கு, தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம்  உள்ளிட்டவை மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்த மோடி, தங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் யாரையும் நம்ப மாட்டார்கள் என்றும் கூறினார். 

ராகுலின் கண்களை நேரடியாக  பார்த்து பேச,
தான் தயங்குவதாக ராகுல் தெரிவித்ததை சுடடிக்காட்டிய பிரதமர், ராகுலின் கண்கள்  என்ன செய்தன என்பதை நாடே பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.

2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிபாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,கருப்பு பண மீட்பு நடவடிக்கை தொடரும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் மோடி பட்டியலிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்