திமுக-பா.ஜ.க இணையப்போர் : தேசிய அளவில் டிரெண்ட் ஆன #GoBackStalin, #WelcomeStalin

#GoBackStalin vs #WelcomeStalin... டுவிட்டரை கலக்கிய அரசியல் போட்டி...
திமுக-பா.ஜ.க இணையப்போர் : தேசிய அளவில் டிரெண்ட் ஆன #GoBackStalin, #WelcomeStalin
x
#GoBackModi, #GoBackAmitSha வரிசையில், தற்போது #GoBackStalin என்ற ஹாஷ்டாக் டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. 

பாரத பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா சென்னை வருகையில், அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டிங்கில் இடம் பிடித்தன. இதன் பின்னணியில் திமுக இருப்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியிருந்தார்.தற்போது அதே போன்ற ஆயுதத்தை கையில் எடுத்து களத்தில் இறங்கியுள்ளது பா.ஜ.க. லண்டன் சென்றிருந்த திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்புவதையொட்டி, பா.ஜ.க-வினர் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். #GoBackStalin என்ற  ஹாஷ்டாக் தேசிய அளவிலான டுவிட்டர் டிரெண்டில் இடம் பிடித்துள்ளது. இதற்கு போட்டியாக #WelcomeStalin என்ற ஹாஷ்டாகை தேசிய டிரெண்டாக மாற்றி, இணையப்போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியுள்ளது திமுக.


அடுத்த டிரெண்டிங்க் ஹாஷ்டாக் என்னவாக இருக்கும்?Next Story

மேலும் செய்திகள்