சட்டப்பேரவை நிகழ்ச்சியை காண உதயநிதி திடீர் வருகை

சட்டப்பேரவை நிகழ்ச்சியை காண உதயநிதி திடீர் வருகை. நண்பர் அன்பில் மகேஷ் பேசுவதை ரசித்து கேட்ட உதயநிதி.
சட்டப்பேரவை நிகழ்ச்சியை காண உதயநிதி திடீர் வருகை
x
சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதில், திமுக தரப்பில் அன்பில் மகேஷ் பேசினார். அவர், பேச்சை துவக்குவதற்கு முன், உதயநிதி ஸ்டாலின், திடீரென தலைமைச் செயலகம் வந்தார். நேராக, சட்டப்பேரவை மாடத்திற்குச் சென்ற அவர், அன்பில் மகேஷ் பேச்சை முழுமையாக கேட்டார். அன்பில் மகேஷ், பல்வேறு புள்ளி விபரங்களை கலகலப்பாக அரைமணி நேரத்திற்கும் மேலாக பேசினார். அவர் பேச்சை முடிக்கும் வரை, பேரவை மாடத்தில் அமர்ந்து கவனித்த உதயநிதி ஸ்டாலின், அதன்பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

Next Story

மேலும் செய்திகள்