எனக்கு பிடித்த 2 அமைச்சர்கள்...திமுக உறுப்பினர் சுவாரஸ்ய பேச்சு..

சட்டப்பேரவையில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு, திமுக உறுப்பினர் அன்பில் மகேஷ் உதாரணமாக திகழ்வதாகவும், அவரை மற்ற திமுக உறுப்பினர்களும் பின்பற்ற வேண்டும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
எனக்கு பிடித்த 2 அமைச்சர்கள்...திமுக உறுப்பினர் சுவாரஸ்ய பேச்சு..
x
சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக எம்.எல்.ஏ. அன்பில் மகேஷ், அமைச்சர்களில் பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பாஸ்கரன் ஆகிய இருவரும்  தனக்கு பிடித்தமானவர்கள் என கூறினார். 

ஒருவர் சிரித்த முகமாகவே இருப்பார் என்றும் மற்றொருவர் அமைதியாகவே இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார். 

பாலகிருஷ்ண ரெட்டி மற்றும் பாஸ்கரன் போல் அனைத்து அமைச்சர்களும் இருந்தால், தன் உரையை முடிக்க வசதியாக இருக்கும்'' என அன்பில் மகேஷ் கூறியது,  அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ், பாரம்பரியமிக்க அரசியல்  குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றாலும்,  அவர், அவைக்கு வருவதும் தெரியாது; போவதும் தெரியாது என்றும் அவர் அவ்வளவு அமைதியானவர் என்றும் கூறினார். 

அன்பில் மகேஷை போல, மற்ற திமுக உறுப்பினர்களும் நடந்துகொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் கூற, மீண்டும் அபையில் சிரிப்பலை ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்