கர்நாடக அரசின் செயலுக்கு ஸ்டாலின் கண்டனம்

காவிரி விவகாரத்தை கர்நாடக அரசு மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் செயலுக்கு ஸ்டாலின் கண்டனம்
x
காவிரி விவகாரத்தை கர்நாடக அரசு மீண்டும் சிக்கலாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக  ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கர்நாடகா அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, தமிழகத்திற்குத் தொடர்ந்து அநீதி இழைக்க ஒரு கூட்டுச்சதித் திட்டம் உருவாகியிருக்கிறதோ என கருத வேண்டியிருப்பதாக கூறியுள்ளார். 

உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி ஆணைய உத்தரவுகளை வேண்டுமென்றே அலட்சியப்படுத்தும் கர்நாடக முதலமைச்சரின் வழிமுறையை, யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


காவிரி மேலாண்மை ஆணையத்தை செயலிழக்க வைக்கும் கர்நாடக அரசின் திட்டத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு எவ்விதத்திலும் துணைபோய்விடக்கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.தமிழக முதலமைச்சர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, கர்நாடக அரசின் இந்தப் புதிய நிலைப்பாட்டால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலை பற்றி விவாதிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.பிக்களுடன் உடனடியாக பிரதமரை சந்தித்து, காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அப்படியே நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்