கருப்பு பண விவகாரம் : பிரதமர் மீது ராகுல் தாக்கு

சுவிஸ் வங்கியில் இருப்பது வெள்ளை பணமா? - பிரதமர் நரேந்திரமோடிக்கு, ராகுல் காந்தி கேள்வி
கருப்பு பண விவகாரம் : பிரதமர் மீது ராகுல் தாக்கு
x
கருப்பு பண விவகாரம் : பிரதமர் மீது ராகுல் தாக்குகருப்பு பண விவகாரத்தில், பிரதமர் நரேந்திரமோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் டெபாசிட் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக வெளிவந்த செய்தி குறித்து தமது டுவிட்டர் வலைப்பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, 2014 - ல் கருப்பு பணத்தை மீட்கப்போவதாக பிரதமர் வெளியிட்டிருந்த அறிவிப்பை நினைவு கூர்ந்துள்ளார். சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்படும் கருப்பு பணத்தில் இருந்து ஒவ்வொரு இந்தியர்களின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடப்படும் என பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு என்ன ஆனது? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். சுவிஸ் வங்கியில் அதிகரித்த 50 சதவீத டெபாசிட் அனைத்தும் வெள்ளை பணம்  -  கருப்பு பணம் அல்ல என இப்போது பிரதமர் மோடி கூறுவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 
Next Story

மேலும் செய்திகள்