வாகன உற்பத்தியில் தமிழகம் முதல் 10 இடத்தில் உள்ளது - தொழில்துறை அமைச்சர்

மோட்டார் வாகன உற்பத்தியில் தமிழகம் டாப் 10 இடத்தில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்..
வாகன உற்பத்தியில் தமிழகம் முதல் 10 இடத்தில் உள்ளது - தொழில்துறை அமைச்சர்
x
அதிமுக ஆட்சியில் தொழிற்துறை, பின்னடைவை சந்தித்துள்ளதாக அணைக்கட்டு தொகுதி உறுப்பினர் நந்தகுமார் குற்றஞ்சாட்டினார். 
இதற்கு பதில் அளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் சம்பத்,  2011ஆம் ஆண்டு முதல் 2017 வரை அதிமுக ஆட்சியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 24 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடாக தமிழகம் பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 

மேலும், 1995ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்ட போர்டு கார் நிறுவனம், ஆண்டுக்கு 10 லட்சம் கார்களை தயார் செய்வதாகவும், மோட்டார் உற்பத்தியில் தமிழ்நாடு கேந்திரமாக செயல்படுவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்