பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில் அமைச்சருக்கு தெரியாமல் அந்த பணிகள் நடந்துள்ளதா? என முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி உள்ளார்.
பள்ளிக்கல்வி அமைச்சருக்கு தெரியாமல் பாடப் புத்தகம் அச்சடிப்பதா..? - தங்கம் தென்னரசு கேள்வி
x
புதிய பாட புத்தகங்களில், கி.மு.,-கி.பி., என்பதற்கு பதில், பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என சேர்க்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக உறுப்பினர் இன்பதுரை, காங்கிரஸ் உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர், சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கி.மு. , கி.பி. என்றே தொடரும் என பதிலளித்தார். 

இதுதொடர்பாக தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் கி.மு.,-கி.பி., என இடம்பெறும் என கூறுவதை பார்த்தால், அவருக்கு தெரியாமல் பாட புத்தகங்கள் அச்சிடப்பட்டதா?' என கேள்வி எழுப்பி உள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்