"சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற யாரிடம் கருத்து கேட்டீர்கள்?" - அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி

காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டம், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று நடைபெற்றது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற யாரிடம் கருத்து கேட்டீர்கள்? - அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி
x
இந்தக் கூட்டத்தில், தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில் பேசிய சிவி சண்முகம், காவேரி விவகாரம், கச்சத்தீவு பிரச்சனை, முல்லைப் பெரியாறு பிரச்சனை, இலங்கை தமிழர் விவகாரம் மற்றும் நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் திமுகதான் காரணம் என குற்றம் சாட்டினார். 

8 வழி சாலை அமைப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கூறும் திமுக, சேது சமுத்திர திட்டம் தொடர்பாக எந்த மக்களிடம் கருத்து கேட்டது 
எனக் கேள்வி எழுப்பிய அவர், உச்சநீதிமன்றம் தான் சேது சமுத்திர திட்டத்தை நிறுத்தியது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்