அமைதி நிலவக்கூடாது என சில அரசியல் கட்சிகள் நினைப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு

நாட்டில் அமைதி நிலவக்கூடாது என சில அரசியல் கட்சிகள் நினைப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
அமைதி நிலவக்கூடாது என சில அரசியல் கட்சிகள் நினைப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு
x
உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக லக்னோ சென்ற பிரதமர் மோடியை, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார். இதைத்தொடர்ந்து ​மெஹர் நகர் (maghar)சென்ற பிரதமர்,  உத்தரப்பிரதேசத்தின், சிறந்த ஆன்மிகவாதியும், கவிஞருமான கபீரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். 

வளர்ச்சி திட்டங்களை பற்றி கவலைப்படாத தலைவர்கள்இதைத்தொடர்ந்து கபீர் அகாடமிக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் மெஹர் நகரில் நடைபெற்ற  பிரமாண்ட கூட்டத்தில் உரையாற்றிய மோடி,  நாட்டில் அமைதி நிலவக்கூடாது என சில அரசியல் கட்சிகள் நினைப்பதாக விமர்சித்தார். ஆட்சி அதிகாரத்திற்கு வர நினைக்கும் சிலர்  வளர்ச்சி திட்டங்களை பற்றி கவலைப்படுவதில்லை உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவை மறைமுகமாக சாடினார். 

Next Story

மேலும் செய்திகள்