நீட் விலக்கு - ஸ்டாலின் கேள்வி - அமைச்சர் பதில்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரும் மசோதாக்களை குடியரசு தலைவர் நிறுத்தி வைத்திருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நீட் விலக்கு - ஸ்டாலின் கேள்வி - அமைச்சர் பதில்
x
* எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், நீட் தேர்வில் விலக்கு கோரி குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட இரு மசோதாக்களின் நிலை மற்றும்

* பிற மாநில மாணவர்கள் முறைகேடாக தமிழகத்தில் சேர்க்கப்படுவதை தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

* அத்துடன், குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்கள் வேண்டுமென்றே கிடப்பில் போடப்பட்டிருந்தால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்

* இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசு அனுப்பிய இரு சட்ட மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டதற்கான காரணத்தை கேட்டிருருப்பதாக தெரிவித்தார்.

* சட்ட ரீதியிலான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

* மேலும், வேறு மாநில மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர முடியாத அளவிற்கு 14 சரத்துக்கள் அறிவிக்கையில் சேர்க்கப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்