"தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி

தீவிரவாதம் வேரோடு அறுக்கப்பட்டுவிட்டது
தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி
x
சட்டப்பேரவையில், காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராமசாமி, தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து பேட்டி அளித்து வருவதாகவும், அவரை ஏன் இந்த அரசு கண்டிக்கவில்லை என கேள்வி எழுப்பினார்.மத்திய அமைச்சர் சொல்வது உண்மையா என்பதை விளக்க வேண்டும், இல்லை எனில், மத்திய அமைச்சரை, முதலமைச்சர் கண்டிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். அப்போது குறுக்கிட்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் தீவிரவாதம் வேரோடு அறுக்கப்பட்டுவிட்டது என்றார். மேலும், தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்வதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்