"ஆளுநர் ஆய்வு சட்டத்துக்கு உட்பட்டதே" - ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம்

ஆளுநரின் ஆய்வு குறித்து ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
ஆளுநர் ஆய்வு சட்டத்துக்கு உட்பட்டதே - ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம்
x
ஆளுநரின் ஆய்வு குறித்து ஆளுநர் மாளிகை மீண்டும் விளக்கம் அளித்துள்ளது. அதில், மாவட்டங்களில் அதிகாரிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நடத்திய ஆய்வு, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது தான் என கூறப்பட்டுள்ளது. ஆளுநர் ஆய்வு தொடர்பான தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்டவற்றையும் ஆளுநர் மாளிகை  சுட்டிக் காட்டியுள்ளது. ஆளுநர் ஆய்வு மற்றும் மாவட்ட அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை குறித்து சட்ட வல்லுநர்கள் ஸ்ரீஹரி அனே உள்ளிட்டவர்கள் கொடுத்த விளக்கங்களுடன் ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அதிகாரிகளுக்கு உள்ள அதே அதிகாரங்கள், ஆளுநருக்கும் உண்டு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்