அதிக குற்றங்கள் நடைபெறக்கூடிய பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் - ஸ்டாலின்

ஓய்வு பெற்ற ஒருவரை டி.ஜி.பியாக தொடர்ந்து பணியாற்ற கால நீட்டிப்பு கொடுத்ததற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார் - ஸ்டாலின்
அதிக குற்றங்கள் நடைபெறக்கூடிய பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடம் - ஸ்டாலின்
x
கொலை, செயின் பறிப்பு என கொள்ளை குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்த காவல்துறையை தயார்படுத்தவில்லை என ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் இந்த ஆண்டு மட்டும் காவல்துறை அத்துமீறல் குறித்த விசாரணைக்காக, மூன்று கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா, சிலை திருட்டு, உள்ளிட்டவை அதிகளவில் நடைபெற்று வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார். பத்து லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகராட்சிகளில் பெண்கள் பாதுகாப்புக்காக வழங்கப்படும் நிர்பயா நிதியில் ஒரு ரூபாயை கூட செலவழிக்கவில்லை என சி.ஏ.ஜி. அறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசினார். 

அதிக குற்றங்கள் நடைபெறக்கூடிய பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசிய ஸ்டாலின், சேலத்தில் பசுமை வழிச்சாலையை எதிர்த்து போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்கள் கைது செய்யப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். ஓய்வு பெற்ற ஒருவரை டி.ஜி.பியாக தொடர்ந்து பணியாற்ற கால நீட்டிப்பு கொடுத்ததற்கான காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார். இதிலிருந்தே குற்றங்களை தடுக்க காவல்துறையை தயார் படுத்தவில்லை என்பது தெரிய வருவதாகவும் கூறிய ஸ்டாலின்,  காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தினார். 


"கொலை குற்றங்கள் திமுக ஆட்சியில் தான் அதிகம்" - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பதில்


Next Story

மேலும் செய்திகள்