காவிரி மேலாண்மை ஆணையம் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று ஆலோசனை

மத்திய அரசின் முடிவை தொடர்ந்து சட்ட வல்லுனர்கள், அதிகாரிகளுடன் பிற்பகலில் ஆலோசனை
காவிரி மேலாண்மை ஆணையம் : கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி இன்று ஆலோசனை
x
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அடுத்த கட்ட முடிவு எடுப்பதற்காக சட்ட வல்லுநர்களுடன் கர்நாடக முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகா தரப்பில் உறுப்பினரை நியமிக்க தாமதம் செய்த நிலையில், ஆணையத்தை மத்திய அரசு செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இதற்கு கர்நாடகா தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தில், அடுத்த கட்ட முடிவு எடுப்பது குறித்து, இன்று பிற்பகலில் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார். பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில், நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்