"அரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்

அரிசி உற்பத்தி தொடர்பாக முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அரிசி உற்பத்தி: வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் - திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
x
அரிசி உற்பத்தி தொடர்பாக முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தரும் புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைதானா என்ற பலத்த சந்தேகம் பல தரப்பினரிடமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசின் புள்ளி விவரத்திற்கும், "ரிசர்வ் வங்கி  வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் பெரும் வேறுபாடு உள்ளதாக அவர் கூறியுள்ளார்.  2013-14ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 53 புள்ளி 49 லட்சம் டன்கள் என்றும், 2014-15ஆம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57புள்ளி 27 லட்சம் டன்கள் என்றும் ரிசர்வ் வங்கியின் புள்ளி விவர கையேட்டில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 
                                           
அதனடிப்படையில் பார்க்கும்போது, 2013-14ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 18 லட்சம் டன்களும், 2014-15ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 22 லட்சம் டன் அளவுக்கும் தமிழக அரசின் புள்ளி விவரத்தில் செயற்கையாக உயர்த்திக் காட்டியிருப்பது தெரிய வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அரசி உற்பத்தி தொடர்பாக முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்