காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் கவுரவிப்பு..

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீர‌ர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி, 2 கோடியே 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கி கவுரவித்தார்.
காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள் கவுரவிப்பு..
x
காமன்வெல்த் போட்டிகளில் 26 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்கள் வென்று இந்தியா மூன்றாம் இடம் பிடித்த‌து. இதில் பதக்கம் வென்ற தமிழக வீர‌ர் வீராங்கனைகளுக்கு 2 கோடியே 20 லட்சம் ரூபாய் ஊக்கதொகையாக வழங்கப்பட்டது. தங்கப்பதக்கம் வென்ற வீர‌ர்களுக்கு 60லட்சம் ரூபாயும், வெள்ளிப்பதக்கம் வென்ற வீர‌ர்களுக்கு 30 லட்சம் ரூபாயும், வெண்கலப்பதக்கம் வென்ற வீர‌ர்களுக்கு 20 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. டேபிள் டென்னிஸ் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்ற சத்யன் மற்றும் சரத்கமல் ஆகியோருக்கு தலா ஒரு கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஸ்குவாஷ் போட்டியில் இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் வென்ற தீபிகா பல்லிக்கலுக்கு 60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பளுதூக்குதலில் தங்கம் வென்ற சதீஸ் வைத்தியலிங்கம் மற்றும் டேபிள் டென்னிசில் தங்கம் வென்ற அமல்ராஜ் ஆகியோருக்கு தலா 50 லட்சம் வழங்கப்பட்டது. இதே போல ஷ்குவாஷ் போட்டியில் வெள்ளிபதக்கம் வென்ற ஜோஷ்னா சின்னப்பாவிற்கு 30 லட்சம் வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்