2-ஜி வழக்கு... நீதிமன்றத்தில் திடீர் ட்விஸ்ட்..! | 2G Case

x

2ஜி வழக்கில் சி.பி.ஐ. தரப்பில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் விசாரணையின்போது ஆஜரானார். அப்போது, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்த சில கருத்துகளை நீக்கி உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். இதற்கு எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆட்சேபம் இல்லை என தெரிவித்தனர். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ் குமார் ஷர்மா, 2-ஜி வழக்கு தீர்ப்பில் சி.பி.ஐ அதிகாரிகள் குறித்து சிறப்பு நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளை நீக்கி உத்தரவிட்டார். சி.பி.ஐ.யின் இந்த மனு, சிறப்பு நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளுக்கானது மட்டும் என்பதையும், விடுவிக்கப்பட்டதற்கு எதிரானது இல்லை என்றும் தெளிவுப்படுத்தினார். 2-ஜி வழக்கில் அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்றும், சி.பி.ஐ மேல்முறையீடு மனு மீதான விசாரணை நாளை மறுதினமும் நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்