உலகமே எதிர்பார்த்த தருணம்.. விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் இன்று உயிர்த்தெழுமா? | Vikramlander

x

நிலவில் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டுள்ள சந்திரயான்-3-இன் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் மீண்டும் இன்று உயிர்த்தெழுமா என்ற எதிர்பார்ப்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளது.

நிலவுக்கு சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது. அந்த விண்கலத்தின் 'விக்ரம் லேண்டர்', ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தபடியும், பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றபடியும் ஆய்வு செய்து வந்தன. 14 நாள்கள் கழித்து நிலவில் பகல் பொழுது முடிந்ததால் லேண்டரும், ரோவரும் ஸ்லீப் மோடில் வைக்கப்பட்டன. இந்த சூழலில் நிலவில் பகல் பொழுது வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்க உள்ளதால், லேண்டரும், ரோவரும் சூரிய சக்தி மூலம் மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்புகள் உள்ளன. அவை வேலை செய்யவில்லை எனில், எப்போதும் செயல்படாமல் போகும் நிலை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்