தமிழக உள்துறை செயலர் பணீந்தர ரெட்டி யார்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பணீந்தர ரெட்டி யார் குறித்து...
x

தமிழக உள்துறை செயலர் பணீந்தர ரெட்டி யார்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், உள்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் பணீந்தர ரெட்டி யார் குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு..1965 ஆம் ஆண்டு ஆந்திராவில் பிறந்த பணீந்தர ரெட்டி, உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர். 1990 தமிழக பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான பணீந்திர ரெட்டி, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி அனுபவம் பெற்றவர். கடந்த 2019 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய துறையின் ஆணையராக பொறுப்பு ஏற்றார். 2020 ஆம் ஆண்டு தமிழகத்தின் வருவாய்த்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்ட பணீந்தர ரெட்டி, இப்போது உள்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். சென்னை நதிகள் மறுசீரமைப்பு திட்டத்தில், கூவம் மறுசீரமைப்பில் இவரது பங்கு முக்கியமானதாக அமைந்தது. வருவாய்துறை நிவாக ஆணையராக பொறுப்பு வகித்த போது வடகிழக்கு பருவமழையின் போது வெள்ளப்பாதிப்புகளை திறம்பட கையாண்டார். உள்துறை செயலாளராக புதிதாக பதவியேற்க உள்ள அவருக்கு, சட்ட ஒழுங்கு நிலை நாட்டுவது, போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்துவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பது, காவல் துறையை நவீனப்படுத்துவது, லாக்கப் மரணங்களை முழுமையாக போக்குவது போன்ற சவால்கள் காத்திருக்கின்றன.


Next Story

மேலும் செய்திகள்