ஆட்சியை பிடிக்கப்போவது யார்..? - மிசோரமில் இன்று சட்டமன்ற தேர்தல்

x

மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது.

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பல கட்சிகளை சேர்ந்த 174 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். ஆயிரத்து 276 வாக்குச் சாவடிகளில் சுமார் 8 லட்சத்து 52 ஆயிரம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்த உள்ளனர். 30 வாக்கு சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் டிசம்பர் 3ம்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். கடந்த சட்டமன்ற தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்