"அந்த லிஸ்ட் எங்க..? நான் சொல்றத செய்ங்க.." - போனில் முதல்வருக்கே ஆர்டர் போட்ட மகன்
மைசூர் தாலுகாவின் கீழானப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், சித்தராமையாவின் மகன் யதீந்திரா கலந்து கொண்டார். அப்போது தனது தந்தையுடன் தொலைபேசியில் பேசிய அவர், நான் கொடுத்த பட்டியலில் நான்கைந்து பேர்தான் இருக்கிறார்கள்... அதை செயல்படுத்துங்கள்... வேறு எதையும் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். எந்த பட்டியல் குறித்து யதீந்திரா பேசியுள்ளார்? என்ன பட்டியல் அது? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. நிர்வாகத்தில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா தலையிடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கு முன்பு, குக்கர் விநியோகம் செய்ததால்தான் தனது தந்தை வெற்றி பெற்றார் என்று யதீந்திரா கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
