#BREAKING | மிசோரமில் தொடங்கியது வாக்குப்பதிவு.. | Mizoram | Voting

x

40 இடங்களைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில் ஆளும் மிசோ தேசிய முன்னணி கட்சி தற்போது பெரும்பான்மையைக் கொண்டுள்ளது. ஆனால், இம்முறை மிசோரமில் மும்முனைப் போட்டி நிலவுவதால் மிசோ தேசிய முன்னணி மற்றும் காங்கிரஸ் மற்றும் சோரம் தேசியவாத கட்சி ஆகிய மூன்று கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

1276 வாக்குச் சாவடிகளில் 4,13,064 ஆண் மற்றும் 4,39,028 பெண் வாக்காளர்கள் உட்பட 8,52,088 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை வாக்களிக்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலுக்காக மிசோரம் முழுவதும் 1276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 50 கம்பெனிகளை சேர்ந்த மத்திய ஆயுதப்படை வீரர்கள் பாதுகாப்பு பணிகளுக்காக ஈடுபட்டுள்ளனர்.

இதைத்தவிர சுமார் 5,000 தேர்தல் பணியாளர்கள் மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் பணியில் ஈடுப்படுள்ளனர். சுமார் 30 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

40 உறுப்பினர்களைக் கொண்ட மிசோரம் சட்டமன்றத்தில் கடந்த 2018 தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 37.8 சதவீத வாக்குகளுடன் 26 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்