வேறொரு பெண்ணுடன் கல்யாணம்.. காதலன் முன் எமனாக தோன்றிய காதலி - அடித்து உதைத்த மக்கள்

x

உத்திரபிரதேச மாநிலம் பாலியா பகுதியை சேர்ந்த ராகேஷை, இளம்பெண் நீண்ட காலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் காதலை, இருவீட்டாரின் பெற்றோர் எதிர்த்து வந்துள்ளனர். இதனிடையே, ராகேஷுக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க, பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, ராகேஷின் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அதனை அறிந்து ஆத்திரமடைந்த இளம்பெண், மணமகன் உடையில் இருந்த ராகேஷ் மீது ஆசிட்டை வீசினார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இளம்பெண்ணை அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதில் காதலனுக்கு சிறிய அளவிலேயே காயம் ஏற்பட்டதால், அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்