மத்திய அரசை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்ற ட்விட்டர் - தீர்ப்பில் காத்திருந்த அதிர்ச்சி

x

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021 விதிமுறை 4, உப பிரிவு 1டியின் படி, பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும், மாதாந்திர விளக்க அறிக்கையை வெளியிட வேண்டும்.

ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்படும் புகார்கள் மற்றும் அவற்றை களைய ட்விட்டர் மேற்கொண்டு ள்ள நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை இந்த மாதாந்திர விளக்க அறிக்கையில் வெளியிட வேண்டும்.

அவதூறான பதிவுகள், பயங்கரவாதத்தை தூண்டும் பதிவுகள், பொய் பிரச்சாரம், குழந்தைகளை பாலியல் ரீதியாக சுரண்டும் பதிவுகள், சட்ட விரோதமான நடவடிக்கைகள், போர்னோ கிராபி பதிவுகள் போன்றவற்றை பற்றி பொது மக்கள் மற்றும் அரசு துறை அமைப்புகள் அளிக்கும் புகார்களை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

விதிமுறைகளை மீறும் பதிவுகளை உடனுக்குடன் நீக்க வேண்டும். இவற்றை மேற்பார்வையிட ஒரு குறை தீர்ப்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று தகவல் தொழில்நுட்ப சட்டம் 2021 கூறுகிறது.

இந்நிலையில், 2023 மே மாதம் வரை மாதாந்திர விளக்க அறிக்கையை வெளியிட்டு வந்த ட்விட்டர் நிறுவனம், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான விளக்க அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை.

முன்னதாக, மத்திய அரசு, 2021 மற்றும் 2022ல், பல்வேறு ட்விட்டர் கணக்குகளை முடக்க, டிவிட்டர் நிர்வாகத்திற்கு ஆணை யிட்டது. இதை எதிர்த்து கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த ஜூன் 30ல் விசாரணைக்கு வந்தபோது ட்விட்டரின் மனுவை தள்ளுபடி செய்த கர்நாடகா நீதிமன்றம், அதன் மீது 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக, மாதாந்திர விளக்க அறிக்கையை வெளியிடுவதை ட்விட்டர் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ட்விட்டர் மீது மத்திய அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும்

இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்தடுத்த நாட்களில் என்ன நடக்கும் என்பதை ஆவலுடன் உற்று நோக்கி வருகின்றனர் ட்விட்டர் பயனாளிகள்.


Next Story

மேலும் செய்திகள்