வீரபாண்டிய கட்டபொம்மனை வணங்கி - தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட BJP வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்

x

திருப்பூரில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ பி முருகானந்தம், திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மன்னரை, பாரப்பாளையம், பொம்ம நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பாரப்பாளையம் பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, அவருக்கு தொண்டர்கள் மேளதாளம் முழங்க பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்