விவசாய நிலத்தில் சடலமாக கிடந்த மூவர்..! அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

x

ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் ஆழ்துறை கிணற்றில் இருந்து மின்சார மோட்டாரை எடுக்க முயன்ற போது, மூன்று பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவின் காக்கிநாடா மாவட்டம் ராஜூபூடி அருகேயுள்ள விவசாய நிலத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று இருந்துள்ளது. கிணற்றினுள் இருந்த மின்சார மோட்டார் செயலிழந்து விட்டதாக கூறி, அதனை வெளியில் எடுத்து சரி செய்ய விவசாயி முடிவு செய்துள்ளார். இதற்காக தனது உறவினர் இருவரை அழைத்து அவர், மோட்டாரை வெளியில் எடுத்த போது, திடீரென மின்சாரம் தாக்கி மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், சம்பவ இடத்தில் மூவரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மூவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்