அச்சுறுத்தும் `DEEP FAKE'..எச்சரித்த மத்திய அமைச்சர்

x

DEEP FAKE தொழில்நுட்பத்தின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜனநாயகத்திற்கு புதிய அச்சுறுத்தலாக DEEP FAKE தொழில்நுட்பம் உருவெடுத்துள்ளதாகவும், அதனை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார். DEEP FAKE தொழில்நுட்பத்தை தாமாகவே கண்டறியும் விரிவான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளதாக கூறிய அமைச்சர், DEEP FAKE மூலம் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் என தெரிவித்தார். மேலும் இந்த தொழில்நுட்பத்தை ஒழுங்குபடுத்துவதற்கான 4 விதமான வழிமுறைகள் குறித்து அடுத்த 10 நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்