"திருப்பதி உண்டியல் காணிக்கை இவ்வளவு கோடியா..!" - ரெடியாகும் மெகா பட்ஜெட்

x

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருப்பதி மலையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அறங்காவலர் குழு தலைவர் கருணாகர ரெட்டி, 5 ஆயிரத்து 141 கோடியே 74 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். நடப்பு நிதி ஆண்டில் இதுவரை ஏழுமலையானுக்கு ஆயிரத்து 6 11 கோடி ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது என்றும், வங்கி நிரந்தர வைப்பு நிதி மூலம் ஆயிரத்து 68 கோடியே 51 லட்ச ரூபாய் வட்டி வருமானம் கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். பிரசாத விற்பனை மூலம் 550 கோடி ரூபாயும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் 328 கோடி ரூபாயும் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்