"எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய சொன்னது இவர்கள் தான்.." - புயலை கிளப்பிய ட்விஸ்ட்

x

நாடாளுமன்றத்தில் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் முடிந்த பிறகும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்கிறது. இந்த சூழலில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள்தான் தன்னிடம் வந்தது சஸ்பெண்ட் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்கள் என கூறியுள்ளார். நாங்கள் எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ய விரும்பவில்லை எனக் கூறியிருக்கும் பிரகலாத் ஜோஷி, சில எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுத்ததும், என்னிடம் வந்து பேசிய எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தங்களையும் சஸ்பெண்ட் செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்கள் என்றார். நாடாளுமன்றத்தில் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு கண்டனம் தெரிவித்தவர், திருத்தப்பட்ட குற்றவியல் சட்ட மசோதாக்களை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் செல்ல வாய்ப்புகள் திறந்தே உள்ளது என்றார்.


Next Story

மேலும் செய்திகள்