கேன்சரை விரட்டும் உலகின் முதல் ஊசி.. உள்நுழைந்த 7 நிமிடத்தில் தேடி தேடி வேட்டையாடும்..!

x

புற்று நோய்க்கு ஊசி கண்டறிந்து வரலாற்று சாதனை புரிந்துள்ளது, இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு....

அது குறித்து விளக்குகிறது இந்த சிறப்புத் தொகுப்பு....

புற்று நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டாலே அவருக்கு

மரணபீதி தொற்றிக்கொள்ளும், அந்த அளவிற்கு உடலையும்,

மனதையும் ஒருசேர பாதிக்கும் வியாதிதான் புற்று நோய்.

சமீப ஆண்டுகளில் அதன் பரவல் வேகமெடுத்து வருகிறது....

2022 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் மட்டும்

19 லட்சம் பேர் புற்றுநோயின் பிடியில் சிக்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு தீவிரமாக பரவிவருகிறது.

புற்றுநோய்க்கு ஊசியை கண்டறிய பல நாடுகள் போட்டா, போட்டி போடுகொண்டிருந்த நிலையில், இங்கிலாந்து அந்த ரேசில் வெற்றி கண்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த, பொது சுகதார அமைப்புதான் அந்த சாதனையை தன் வசமாக்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தீவிர ஆய்வில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது அந்த ஊசியை கண்டறிந்துள்ளனர்.

வழக்கமாக புற்று நோய்க்கான மருந்து உடலில் செலுத்தப் பட்டால், அது உடலில் இயங்கத் துவங்க 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிவிடும்... ஆனால் புதிதாக கண்டறியப்பட்ட, இந்த ஊசியை செலுத்திய 7 நிமிடத்தில் செயல்படத் துவங்கிவிடும் என்கிறார்கள்....

இது ஒரு நோய் எதிர்ப்பு சிகிச்சை மருந்து, உடலில்

செலுத்திய உடனே, புற்றுநோய் செல்களைத் தேடி தேடி வேட்டையாடும்.

நுரையீரல், மார்பகம், கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு இது பயனளிக்கும் என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த ஊசி தற்போது இங்கிலாந்தின் மருந்து மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வழங்கியவுடன், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்...


Next Story

மேலும் செய்திகள்