ரோட்டில் கம்முனு சென்ற மாணவர்கள்..ஓரமா போக சொல்லி வம்பு இழுத்த இளைஞர்கள்.. போதையில் அட்ராசிட்டி..

ரோட்டில் கம்முனு சென்ற மாணவர்கள்..ஓரமா போக சொல்லி வம்பு இழுத்த இளைஞர்கள்.. போதையில் அட்ராசிட்டி..
Published on

புதுச்சேரியில் தனியார் பள்ளி மாணவர்களை மது போதையில் வாலிபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது, மேலும் இரண்டு வாலிபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி,

திருக்கனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 10 க்கும் மேற்ப்பட்டோர் நேற்று மாலை பள்ளி முடிந்து திருக்கனூர் தபால் நிலையம் அருகே நடந்து வந்து கொண்டிருந்தனர், அப்போது அவர்கள் எதிரே வந்த இரண்டு வாலிபர்கள் மாணவர்களை பார்த்து ஏன் ஒரமாக நடந்து வர மாட்டீர்களா என தகாத வார்த்தைகளால் திட்டி அவர்களை தாக்கியுள்ளனர், இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியதை அடுத்து அந்த காட்சிகளை கொண்டு மாணவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமிராவில் பதிவான வாலிபர்கள் யார் என்பது குறித்து விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியில் சேர்ந்த மதுபான கடையில் பணி புரிந்து வரும் ரியாஸ் (24), மற்றும் திருமலை உள்ளிட்டவர்கள் என தெரியவந்ததை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மது போதையில் மாணவர்களை தாக்கியது தெரியவந்தது, இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும் மாணவர்களை மது போதை வாலிபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com